புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தை சட்டமாக்கும் சட்டமூலம்

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகச் சென்ற போர் வீரர்கள், தீவிரவாத அல்லது அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் மற்றும் விஷ ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் போன்றவர்களைப் புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகமயமாக்குவதற்கும் அவர்கள் தொடர்பான பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கும் ஏதுவான வகையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தை நாடாளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு