இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதிகள் முகாமில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் சந்திரமோகன் (வயது 37) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.

சந்திரமோகன் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளதுடன், இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், திங்கட்கிழமை வழக்கம்போல தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் தூங்கிவிட்டனர்.

செவ்வாய்க்கிழமை காலை பார்க்கும் போது, வீட்டின் உத்தரத்தில் சந்திரமோகன் தூக்கிட்டு இறந்து கிடந்ததாகத் தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதுடன், இதுதொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு