விவசாய நிலங்கள் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக, மகா போகத்தில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டியிருப்பினும், 4 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக ஏக்கர் வயல் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் 73 நீரேந்துப் பகுதிகளைப் பயன்படுத்தியே, மேற்படி மகா போகத்துக்கான நீர் பெற்றுக்கொள்ளப்படுகின்ற போதிலும், குறித்த நீரேந்துப் பகுதிகளுக்குத் தேவையான நீர் போதியளவில் கிடைக்கப்பெறாமையால், இம்முறை விவசாயச் செய்கையில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்படி 73 நீரேந்துப் பகுதிகளிலும் மொத்தமாகப் பார்க்குமிடத்து 29 சதவீதமளவிலேயே நீர் காணப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் முகாமைத்துவப் பிரிவுப் பணிப்பாளர் வசந்த பலுகஸ்வெவ தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு