ஆவா குழுத் தலைவர் மீண்டும் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபராக கருதப்பட்டவரும் ஆவா குழுவின் தலைவராக அறியப்பட்டவருமான நிசா விக்டர் என்பவர் பொலிசாரின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்ற போதிலும், சிலமணி நேரத்தில் மீண்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். கோப்பாயில் அண்மையில் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துவந்த இந்த நபருக்கு நேற்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த போதிலும், அவரை பிணையில் எடுக்க அவர் சார்பில் அவர் உறவினர்கள் எவரும் மன்றில் சமூகமளிக்கப்படாத நிலையில் இந்த சந்தேகநபர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இவருடன் தொடர்புபட்ட பிறிதொரு வழக்கில் ஆஜர்ப்படுத்தும் பொருட்டு, மல்லாகம் நீதிமன்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் இவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த போது, குறித்த சந்தேகநபர் சிறைக் காவலர்களின் பாதுகாப்பிலிருந்து விடுபட்டு நீதிமன்ற வளாகத்திலருந்து தப்பிச்சென்றுள்ளார்

எனினும், துரிதமாக இவரைத் தேடும் பணிகளை சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட நிலையில் குறித்தநபர் கோப்பாயிலுள்ள அவரின் உறவினர் வீடொன்றில் வைத்து மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு