வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த நபரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலவாக்கலை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை நேற்று சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் அனுமதி பெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே சட்டவிரோத சிகரெட் வகைகளை விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரான கடை உரிமையாளரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் வழக்கு பதிவுசெய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு