தமிழர்களுக்கான தீர்வு சிங்களவர்களிடமில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் சிங்கள தலைவர்களின் மத்தியில் இல்லையென அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் தமது கடமையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த இராணுவத்தினர், அரசியல்வாதிகளின் பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு கோரியதாகவும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு அரசியல்வாதிகளிடம் உள்ளது என்ற போதிலும், அதனை அரசியல்வாதிகள் செய்கின்றனரா? என்பதே தற்போதைய கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், அதற்கு பதிலாக அந்த பிரச்சினையை மேலும் வலுவடைய செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களையே மேற்கொண்டு வருவதாகவும்,

கெட்டலோனியாவுடன் இலங்கையின் அரசியல் அமைப்பு திருத்தத்தை ஒப்பிடுவதாகவும், நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பிரசாரம் செய்வதாகவும், தற்போதைய நிலையில் ஜீவனோபாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய பிரசாரங்கள் மக்களை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து அனைவரும் புரிந்துணர்வுடன் செயலாற்றாத பட்சத்தில் இன்னுமொரு தலைமுறைக்கு இந்த தேசிய பிரச்சனை கடத்தப்படுகின்ற அதேவேளை, இந்த தேசிய பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு