197 பேரை மீள அழைத்துவர ஏற்பாடு

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு, முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இலங்கையர்கள் 197 பேரையும் மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறானவர்கள், நவுரு, பபுவாநியூகினியா, அவுஸ்திரேலியா மற்றும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவ நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நவுருவில் 94 பேரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், இலங்கையர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களை இலங்கைக்கு அழைத்துவர முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு