சந்தையை நிரந்தரமாக்கக் கோரிக்கை

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்துத் தாருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுவரை காலமும், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை, 03 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இரணைமடு சந்தை மற்றும் 06 கிலோமீற்றரில் தொலைவிலுள்ள கிளிநொச்சி சந்தைகளுக்கு கொண்டுசென்றே சந்தைப்படுத்த வேண்டியிருந்த அதேவேளை, தமது அன்றாடத் தேவைகளுக்காக, குறித்த சந்தைகளுக்குச் சென்றே, பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டி காணப்பட்ட நிலையில், அதிக குடும்பங்கள் வசிக்கும் தமது கிராமத்துக்கான சந்தை ஒன்றை அமைக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எவரும் முன்வராத நிலையில், குறித்த பகுதியில் தற்காலிகச் சந்தை ஒன்றை அமைத்தனர்.

இந்நிலையில், குறித்த தற்காலிக சந்தை அமைந்துள்ள காணியானது, கூட்டுறவுச் சபையினருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதென, பிரதேச செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், தமது கிராமத்துக்கான சந்தை அமைப்பதற்கு குறித்த பகுதியை ஒதுக்கித் தருமாறும் இல்லையேல், பொருத்தமான பகுதி ஒன்றை தமக்கு தந்து, தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு