பதவி விலக முகாபே மறுப்பு

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் அழுத்தம் விடுக்கப்பட்டாலும், பதவியிலிருந்து விலகுவதற்கு ரொபர்ட் முகாபே மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சில வாரங்களுக்கு ஆட்சியிலிருப்பதற்கே விரும்புவதாக ஜனாதிபதி ரொபர்ட் முகாபே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து முகாபேயை நீக்கிய கட்சி உறுப்பினர்கள், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் தொலைக்காட்சியினூடாக ஆற்றிய உரையிலேயே பதவி விலகுவதற்கு ஜனாதிபதி முகாபே மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் ஆற்றிய உரையில், தம்மை இராஜினாமா செய்யுமாறு விடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் எவ்வித கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு