முன்பள்ளிகளின் தரத்தை உயர்த்த சிறுவர், மகளிர் விவகார அமைச்சுடன் செயற்பட திட்டம்

முன்பள்ளிகளின் தரத்தை அதிகரிக்க வருங்காலத்தில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து செயற்பட கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், முன்பள்ளிகள் சிறார்களின் வாழ்வில் அடித்தளத்தை வழங்குவது என்பதால், அது குறித்து அவதானம் செலுத்துவது அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேசத்தின் உதவியுடன் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் முன் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும் எனவும் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு