நெப்போலியனின் கிரீடத்தின் தங்க இலை ஏல விற்பனை

பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மாவீரன் நெப்போலியன் 1804ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்ட போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன.

கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 06 தங்க இலைகள் பிரித்து எடுக்கப்பட்டு, பின்னர் அவை பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் தனது மகள்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் ஒரு தங்க இலை பாரிஸிலுள்ள ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்ட போது, 625,000 யூரோக்களுக்கு (550,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸ், இலங்கை மதிப்பில் 1127,58,943 ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 06 மடங்கு அதிகமான தொகைக்கு இந்த தங்க இலை ஏலத்தில் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு