இலங்கை – இந்திய பிரதமர்கள் சந்திப்பு

இந்திய மற்றும் இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளையதினம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதன்போது இருநாட்டு மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீனவர்கள் மட்ட மற்றும் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் பலதடவைகள் இடம்பெற்றுள்ள போதிலும், இதற்கு இன்னும் இறுதியான தீர்வு காணப்படவில்லை.

குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்கள் அனுமதி கோருகின்றமையை இலங்கை மறுத்துவரும் நிலையில்? இது குறித்து நாளைய பேச்சுவார்த்தையின் போது முக்கியமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு