மானுஸ்தீவின் நிலைமை தீவிரம்

இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் தங்கியுள்ள மானுஸ்தீவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

பப்புவாநியுகினி நாட்டுக்கு சொந்தமான இந்த தீவில், அவுஸ்திரேலியா நோக்கி படகுகள் மூலம் செல்கின்ற அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறித்த முகாமை மூடுவதற்கு பப்புவாநியுகினி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த மாதம் முகாம் மூடப்பட்ட போதிலும், அதில் இன்னும் 400 அகதிகள் வரையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கேயே தங்கியுள்ளனர்.

குறித்த அகதிகளை பப்புவாநியுகினியில் அல்லது அதற்கு சொந்தமான மற்றுமொரு தீவில் தடுத்து வைக்க முயற்சிக்கப்படுகின்ற போதும், பலர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கான உணவு, நீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு அகதிகள் மிகப்பெரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தவிடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை வலியுறுத்தியுள்ள அதேவேளை, குறித்த முகாமில் இருந்து 250 வரையான அகதிகள் வெளியேறி வேறு இடங்களில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு