வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு?

இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாக முதலீட்டு சபையின் தலைவர் துமிந்தர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகை கடந்த 2016ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். எவ்வாறாயினும் புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்வருகை குறைவாகவே இருப்பதாகவும், ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்துள்ளவர்களே தங்களின் முதலீட்டை விரிவாக்கவும், வெவ்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு