தென்கொரியா செல்லவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28ஆம் திகதி தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அந்த நாட்டு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் செல்லும் இவர், 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை, அவர் எதிர்வரும் 29ஆம் திகதி தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதுடன், தென்கொரியாவின் வர்த்தகக் குழுவினர் மற்றும் அங்கு வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு