யாழில் 34 ஏக்கர் நெற்செய்கை அழிவு

அண்மையில் பெய்த மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர் பீ.தயாபரசிங்கம் தெரிவித்துள்ளார்.

அந்த வயல் நிலங்களில் நூற்றுக்கு 85 சதவீதமானவை எவ்வித பயனையும் பெறமுடியாத நிலையில் அழிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் யாழ்ப்பாணத்தில் நிலக்கடலை, வெங்காயம், மிளகாய் மற்றும் மரக்கறி பயிரிடப்பட்டிருந்த 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அதிக மழையால் அழிவடைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர் பீ.தயாபரசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு