இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முக்கிய செய்திகள் 2

நாட்டில் 20 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக கருதப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 55 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர் என்றும் இது 2021இல் பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.