செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தமிழகத்தின் தனுஷ்கோடி கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியிலிருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக சுங்கத்துறையினருக்கு நேற்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கீழக்கரை, மண்டபம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் சுங்கத்துறையினர் தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மண்டபம் மரைக்காயர் பட்டிணம் அருகேயுள்ள முயல்தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு