கொக்குவில் இளைஞன் கைது – பின்னணியில் வாள்வெட்டுச் சம்பவம்

யாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (வயது 18) என்ற இளைஞரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கோப்பாய் பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் உட்பட கோப்பாய் மற்றும் முடாமவடி கடை உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன், இவரிடமிருந்து சிறு கைகோடரி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்று (25) யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு