செல்ஃபி மோகத்தால் 24 பேர் உயிரிழப்பு

ரயில் பாதையில் செல்ஃபி எடுப்பதற்கு முயன்ற காரணத்தினால் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை எதிர்காலத்தில் குறைத்துக் கொள்ளும் பொருட்டு பரந்தளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அந்த சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளதுடன், இந்த வருடத்துக்குள் மாத்திரம் செல்ஃபி எடுக்க முயன்ற 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காதிருக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு