மீண்டும் முகக்கவசம் அணியவும் – நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

சிறப்பு கட்டுரைகள் முக்கிய செய்திகள் 2

இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய் நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி,

– முகக்கவசம் அணியவும்

– நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்

– நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருக்கவும்

– அறிகுறிகள் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்

– கைகளை சுத்தமாக கழுவவும்

– கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்

– ஏனைய நல்ல ஆரோக்கிய பழக்கங்களை கடைபிடிக்கவும்