தாம் தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை! – ஜனாதிபதி

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

தாம் தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தலை ஒத்திவைக்க தமக்கு அதிகாரம் இல்லையென்று குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய தேவை பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் விடயங்களுக்குள் அராஜகம் மற்றும் வன்முறை என்பன உள்ளடங்குவதில்லை.

எனவே அவற்றுக்கு இடம் தரமுடியாது எனவும் ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரித்துள்ளமை குறித்து கருத்துரைத்த அவர், படையினருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் புதிய உத்திகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.