2020இல் விண்ணில் பாயவுள்ள இலங்கையின் விண்கலம்

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக சீனாவின் சின்ஹ_வா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்பொருட்டு இலங்கை சார்பில் ஆதர்சி க்ளாக் மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவையான தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ரஷ்யாவின் சமாரா கிரகண தொழில்நுட்ப ஆய்வு கூடத்துடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமது பிரதான நனோ தொழில்நுட்பதுடனான செயற்கைக்கோள் வடிவமைப்பு பணிகளை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. இதன்பிரகாரம், 2020ஆம் ஆண்டு அதனை விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த செயற்கைக்கோளின் ஊடாக தொலைத்தொடர்பு புகைப்படம் காலநிலை தகவல்கள் அதுபோல தொழில்நுட்ப தகவல்கள், ஆழிப்பேரலைத் தகவல்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு