யாலயில் ‘சண்டியா’ மீது துப்பாக்கிச் சூடு!

முக்கிய செய்திகள் 1

யால பூங்காவில் உள்ள விசேகார சண்டியா என அழைக்கப்படும் கெமுனு என்ற யானை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யானையின் முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தற்போது வனவிலங்கு அதிகாரிகளால் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, யால பூங்காவில் சாண்டோ என்ற யானையுடன் நடந்த கடும் சண்டையின்போது கெமுனு என்ற இந்த யானை தனது வலது தந்தத்தையும் நந்திமித்ர யானையுடன் நடந்த சண்டையில் இடது தந்தத்தையும் இழந்ததுள்ளது.

இருப்பினும் மீண்டும் தந்தங்கள் வளர்ந்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.