ஆப்கானிஸ்தானுடனான தொடரிலிருந்து பானுக ராஜபக்ஷ விலகல்!

முக்கிய செய்திகள் 3

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தமக்கு ஓய்வு வழங்குமாறு பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது துபாயில் இடம்பெற்று வரும் டி10 போட்டிகளில் பங்குபெற்ற அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்ற சான்றிதழையும் வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.