சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான கேள்வியை அதிகரிக்கத் திட்டம்

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான கேள்வியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறு ஏற்றுமதி பயிர்களை பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்வது பற்றி அந்த அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

மிளகு, கறுவா, ஏலம் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளதுடன், குறித்த பயிர்வகைகளின் உற்பத்தியாளர்களை அதன்மூலம் ஊக்குவிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு