ஜனாதிபதி விக்கிரமசிங்க புதிய ஆணையை பெற வேண்டும்: சன்ன ஜயசுமண

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அல்லது வேறு ஏதேனும் விடயங்கள் தொடர்பில் புதிய கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் புதிய ஆணையைப் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயசுமண, ஜனாதிபதி ஒருவர் பதவி விலகியதன் பின்னர் எஞ்சிய காலப்பகுதிக்கு சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் நான்கரை வருடங்களின் பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு தீர்வு காண நீதித்துறையிடம் கருத்து கேட்க வேண்டும்,'' என்றார்.

"தற்போதைய ஜனாதிபதி உடனடி ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையை கொண்டு வர நான் தயாராக உள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார். தற்போதைய ஜனாதிபதி 1994, 2004 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளார், எனவே அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை அவருக்கு இல்லை என்று அவர் கூறினார்.

அதன்படி தற்போதைய ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் பதவிப் பிரமாணம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இறந்தால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும். இது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது.