இலங்கை வருகிறார் நடிகர் சூர்யா?

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் எதிர்பார்க்கப்படும் சூர்யா - 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையிலும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள்u ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கோவா - சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மத்தியிலேயே, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா - 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.

ஐரோப்பாவின் பல்கேரியா - செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா -y வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.

பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.

இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

இதேவேளை, சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தின் சில படப்பிடிப்புகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.