யாழில் சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த சாரதி கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம்,நவ 24

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்துடன், உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரினரால் குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அச்செழு பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்துடன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.