உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே – தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலை

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

தோகா, நவ 24

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் உருகுவே - தென் கொரிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடி, கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 0--0 என ஆட்டம் டிராவில் முடிந்தது.இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது