வாடகை துப்பாக்கி முறையில் பாகிஸ்தானை பயன்படுத்துகிறது அமெரிக்கா: இம்ரான் கான்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இஸ்லாமாபாத், நவ 24

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவுகள் குறித்து மீண்டும் பேசினார்.

அமெரிக்காவை குற்றம் சாட்டிய அவர் கூறியதாவது, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் நாகரீகமானது.

அதே நேரத்தில், ஒப்பிடுகையில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் அநாகரீகமானது. 'வாடகைத் துப்பாக்கி' முறையில் அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்துகிறது என்று கூறினார். முன்னதாக ஏப்ரல் மாதம், தன்னை ஆட்சியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.