நீதிமன்ற நுழைவாயிலில் மது அருந்தியவருக்கு விளக்கமறியல்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அநுராதபுரம் - பதவிய நீதிவான் நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மது அருந்திய குற்றத்திற்காக கைதான இரண்டு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கெப்பத்திகொல்லேவ நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பதவிய நீதிவான் நீதிமன்றத்தினுள் வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் அந்த நீதிமன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதன்போது, குறித்த இருவரும் நீதிமன்ற பாதுகாப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.