மனித கடத்தல் விவகாரம்: மற்றுமொரு சந்தேகநபர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கை பெண்களை ஓமான் நாட்டுக்கு கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற புலனாய்வு பிரிவினர் இதற்கு முன்னர் சந்தேக நபர்கள் சிலரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.