கட்சியைப் பலப்படுத்த ஐ.தே.க நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலக்குவைத்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“அரச ஆட்சியில் காணும் மாற்றம்”, “பலம்மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்”, “புதிய தேர்தல் முறைமை” ஆகிய பிரதான மூன்று கருப்பொருள்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாவது கூட்டம், நாவலப்பிட்டி கிரான்ட் மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மற்றுமொரு கூட்டம், கொலன்னாவை மங்களபாய மண்டபத்தில் நேற்று மாலை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அந்தக் கூட்டங்களுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை இலக்காகக் கொண்டு, கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரையுடன், நாடளாவிய ரீதியில் உள்ள சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 26 கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கை, எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படுமென அக்கட்சி அறிவித்துள்ளது.