திருமலையில் கடும்மழை

திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலத்திற்கு பின்னர் ஏற்பட்ட கடும்மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் பெய்த கடும்மழை காரணமாக வடிகான்களில் நீர் வழிந்தோடுவதுடன், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

அத்துடன், கந்தளாய், வென்ராசன், பனிச்சம்குளம் மற்றும் வான்எல போன்ற குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ள அதேவேளை, கந்தளாய் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற கிராமப்புற பகுதிகளிலுள்ள வயல் நிலங்களும் மழை நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு