சாவகச்சேரியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் நேற்று இரவு சொகுசு பஸ்ஸ_ம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நுணாவிலை சேர்ந்த யோ. சபேஸ்குமார் (வயது 35) மற்றும் க.மோகன் (வயது 34) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸ_ம், சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு