கனகபுரத்தில் மாவீரர் தினம் (Photos)

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் இன்று (27) மாவீரர் நாள் உணர்ச்சிபொங்க அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அதன் பின் அகவணக்கம் செலுத்துப்பட்ட பின்னர் பொதுச் சுடரும், ஏனைய நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு