மன்னாரில் 39 மாணவர்கள் சாதனை!

முக்கிய செய்திகள் 2

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2021ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் (25) மாலை வெளியாகியிருந்தது.

இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டம் மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9 A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதற்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் 15 பேர் 9A சித்தி பெற்றுள்ளனர்.

மேலும் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A சித்திகளையும், மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் 7 பேர் 9 A சித்திகளையும், பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9 A சித்திகளையும், வங்காலை சென் ஆன்ஸ் பாடசாலை மாணவர்கள் 2 பேர் 9 A சித்திகளையும், நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் 2 பேர் 9 A சித்திகளையும், அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவர் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.