பொலிஸ் குதிரைகள் 2 உயிரிழப்பு!

முக்கிய செய்திகள் 1

பொலிஸ் குதிரைப்படை பிரிவில் இரண்டு குதிரைகள் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இந்த இரண்டு டச்சு குதிரைகளில் ஒன்று நிமோனியாவால் இறந்ததாகவும், மற்றைய குதிரை உடல் மெலிந்து உயிரிழந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் பொலிஸ் குதிரைப் பிரிவில் 39 குதிரைகள் பணிபுரிகின்றன.

நெதர்லாந்திலிருந்து எதிர்வரும் ஆண்டில் 12 குதிரைகளை இறக்குமதி செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.