பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக நீர்கொழும்பில் கையெழுத்து வேட்டை

முக்கிய செய்திகள் 1

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் இன்று சனிக்கிழமை (26) நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக வார இறுதி சந்தைக்கு அருகில் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கையெழுத்து பெறுதல் மற்றும் துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிகழ்வு இன்று (26) முற்பகல் 11.00 மணி அளவில்ஆரம்பமானது.

அரசாங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுர விநியோகத்தை மேற்கொண்டதுடன் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாகவும் விலைவாசி அதிகரிப்பு தொடர்பாகவும் ஒலிபெருக்கி மூலம் விளக்கம் அளித்தனர்.

அத்துடன் இது தொடர்பாக தயாரிக்கப்பட்டிருந்த பதாதையில் பொதுமக்களின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் இந்த பதாதையில் கையெழுத்திட்டனர்.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்க அமைப்பினர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.