பாலி தீவில் எரிமலைக் குமுறல்

இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்ததைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு இடர்முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ள அதேவேளை, அபாயம் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு