உலக கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா வெற்றி! வெளியேறியது துனீசியா

முக்கிய செய்திகள் 3

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துனீசியா அணிகள் மோதின.

முதல் பாதியின் 23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் டூயூக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனீசியா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இரு போட்டிகளில் தோற்றதால் துனீசியா தொடரில் இருந்து வெளியேறியது.