சமஸ்டி முறையின் கீழேயே இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டும் – செல்வம்

முக்கிய செய்திகள் 2

சமஸ்டி முறையின் கீழேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இந்தக் கோரிக்கையை இன்று நாடாளுமன்றில் விடுத்தார்.

எனினும் நடைமுறையில் உள்ள மாகாணசபைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதும், அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அந்த மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.