சவூதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசு!

முக்கிய செய்திகள் 3

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தின் சவூதி அரேபியா அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் 2 முறை சம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.

இந்த வெற்றியால் சவூதி அரேபியாவில் மறுநாள் பொது விடுமுறையாக அந்நாட்டு மன்னரால் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவூதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுமென அந்நாட்டு இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

இது போல விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994ஆம் ஆண்டு பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது போலவே கார் பரிசு வழங்கப்பட்டது.

சவூதி அரேபியா இன்றைய 2ஆவது போட்டியில் போலந்தை எதிர்கொள்ளும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள்.

அந்த நாடும் இந்த வீரர்களை வெகுவாக பாராட்டும்.

தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ரோல்ஸ் ரொய்ஸ் கார் வைத்திருக்கிறார்.

இவர், இந்த காரை கொள்வனவு செய்தபோது வரிஅறவிடுதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் விஜய்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், விஜய் தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்தது.