ஸ்ரீ தலதா மாளிகை மின் கட்டணம் ரூ.1.3 மில்லியன் செலுத்தப்பட்டதா?

முக்கிய செய்திகள் 2

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை நிராகரித்த ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, ஸ்ரீ தலதா மாளிகைக்கு பெறப்பட்ட மின்சாரக் கட்டணம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவரால் வழங்கப்பட்ட வசதியைப் பயன்படுத்தி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணப் பிரச்சினையை எழுப்பியதன் பின்னர், தனக்கு 2.7 மில்லியன் பில் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கான மின்சாரக் கட்டணம் எமக்கு இதுவரை வரவில்லை எனவும், இவ்வளவு பெரிய பில் பெறுவது இதுவே முதல் முறை எனவும் அவர் கூறினார்.

எனினும், PUCSL தலைவருடன் பேசினோம். பில் கட்ட சில ஏற்பாடுகள் செய்தார். அதன்பிறகு, ரூ. 1.3 மில்லியன் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.