மானிப்பாயில் ஹெரோயினுடன் இருவர் கைது!

முக்கிய செய்திகள் 1

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய இருவர் தலா 40 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.