மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 17 வயதான குறித்த சந்தேகநபர் வசம் இருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இன்று இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு