பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சீல்

பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து விற்றதாக கூறப்படும், நாஉன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், எரிபொருளில் மண்ணெண்ணெய் கலந்து விற்கப்படுவதாக, நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெற்றோலை கொழும்புக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு