சீரற்ற காலநிலையால் நால்வர் பலி

தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்றில் இருந்த 05 மீனவர்கள் விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற் போயுள்ளதாக படகு கண்காணிப்பு மத்திய நிலையம் கூறியுள்ளது.

உயிரிழந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு மீனவரின் சடலம் அம்பலாங்கொட பட்டபெதிமுல்ல கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொரு மீனவரின் சடலம் அதுரல கடலோரத்தில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு