விமலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சட்டரீதியான வருமானத்தை தாண்டி சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இத்தனை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன், விமல் வீரவன்சவுக்கு எதிராக 32 சாட்சியாளர்களும் 93 சாட்சிப் பொருட்களும் பெயரிடப்பட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு